குரு வாழ்க குருவே துணை
ஓம் கோன்குருநாதா போற்றி போற்றி
அறக்கட்டளையின் நோக்கம்:
இறைத்தொண்டை முதன்மையாகக் கொண்டு மக்களுக்கு இறைவனை உணர்த்தும் மெஞ்ஞானத்தைப் போதித்து, அவர்களை ஆத்மீகத்தில் உயர்த்துவதற்கும், ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்தொண்டுகளைச் செய்யும் பொருட்டும், ஒரு பொதுநல அறக்கட்டளையாக இந்த மெஞ்ஞான சபை செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
அவதார புருஷர் ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள், “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முதுமொழிக்கேற்ப, தான் இறைவனிடம் பெற்ற பேறுகளை இவ்வையகமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தினாலும், தன்னைப்போல் மற்றவர்களும் மாற வேண்டும் என்ற விருப்பத்தினாலும், இந்த மெஞ்ஞான சபையை உருவாக்கி, இறைவனின் அடிப்படைத் தத்துவங்களைப் போதித்து அருளிக் கொண்டிருக்கிறார்.
ஆறாவது அறிவு பெற்ற மனிதனே இறைவனை அடையும் தகுதி பெற்றவனாவான். இறைவனை அடைய முதலில் இறைவனை உணர வேண்டும். இறைவனை உணர இறைவனின் செயல்களை உணர வேண்டும். இறைவனின் செயல்களை உணர இறைவனின் அடைப்படைத் தத்துவங்களை உணர வேண்டும்.
இறைவனின் அடிப்படைத் தத்துவங்கள் எண்ணிலடங்காதவைகளாகும். மனிதன் இறைவனை அடைவதற்குத் தேவையான அடிப்படைத் தத்துவங்களை ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள், இந்த மெஞ்ஞான சபையில் போதித்து அருள்கிறார்.
ஆர்வமும் வைராக்கியமும் கொண்ட ஆத்மீக அன்பர்கள், மேலும் ஆத்மீகத்தில் வளர இவ்வறக்கட்டளையின் இலவச ஆத்மீக சேவைகளை பெற்றுப் பயனடையலாம்.
CORE PHILOSOPHY

சாதாரண மனித நிலையிலிருந்து, ஆத்மீகத்தில் பல நிலைகளில் வளர்ந்து,…READ MORE

மூடநம்பிக்கைகள் மலிந்த இக்கலிகாலத்தில், மெய்யான பக்தியில் வளரும் ….READ MORE

ஸித்திமார்க்கத்தில் பக்தி நிலைகள் மூன்று. அவை தியானம், யோகம் மற்றும் தவம் ….READ MORE

ஸித்திமார்க்கத்தில் பிறப்பால் குருவானவரை “மெய்குரு”…READ MORE

ஸித்திமார்க்கத்தில் ஸித்தர்களும், மெய்குருமார்களும், கோன்குருமார்களும் தீக்ஷை ….READ MORE



