அறக்கட்டளையின் தோற்றம்:
அவதார புருஷர் ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள், 03-10-1978 அன்று சென்னை, கொரட்டூர் வீட்டு வசதி வாரியம்
குடியிருப்பு எண் 84, 2-வது தெரு என்ற முகவரியில், ஸ்ரீகோன்குருநாதர்
மெஞ்ஞான சபையைத் துவக்கினார்.
23-06-1994 அன்று ஸ்ரீகோன்குருநாதர் மெஞ்ஞான சபை அறக்கட்டளை முறையாகப் பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் 135/97 – 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி (07-01-2001) அன்று திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை இரயில் நிலையம் அருகில் உள்ள தொழூவூர் கிராமம், எண் 1, ஆஸ்ரமம் சாலை என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு, சிறப்பாக இயங்கிக் கொண்டு வருகிறது.
ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள் உருவாக்கிய “ஸ்ரீகோன்குருநாதர் மெஞ்ஞான சபை அறக்கட்டளை” ஸித்திமார்க்கத்தைச் சார்ந்ததாகும். இந்த உலகத்திலேயே ஸித்திமார்க்கத்தைப் போதிக்கக்கூடிய ஒரே மெஞ்ஞான சபை இந்த திருச்சபை மட்டுமேயாகும்.
மேன்மை பொருந்திய ஆத்மயோக உபதேசங்களை, கடந்த 44 வருடங்களாக, அதாவது 1978-ல் இருந்து ஆத்மீகத்தில் ஆர்வமும், வைராக்கியமும் உள்ள சீடர்களுக்கு இலவசமாக போதித்து அருளிக் கொண்டிருக்கிறார்.
அனுதினமும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் காலை 4.30 மணி முதல் ஜீவசகோதரர்கள் மெஞ்ஞான சபையில் ஒன்றுகூடி பக்தியுடன் குருமந்திரம் ஓதி யோகத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஆறாவது அறிவு படைத்த மனிதர்களுக்கு இறைவன் அருள வரும் நேரமான பிரம்மமுகூர்த்த காலத்தில் பக்தியில் ஈடுபடுவதால், ஆத்ம வளர்ச்சியும், ஆத்மீக வளர்ச்சியும் பெற்று, குருவருளுக்குப் பாத்திரமாகும் பேற்றினைப் பெற இயலும்.
மற்றும் மெஞ்ஞான சபையில் சீடர்கள் ஒன்றுகூடி அனுதினமும் மாலை 6.30 மணிக்கு குருமந்திரம் ஓதி, அதன்பிறகு இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிற்சபையில் கலந்து கொள்கிறார்கள். சிற்சபையில் குருநாதரின் மேன்மை பொருந்திய உபதேசங்களைப் பல கோணங்களில் சிந்தித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, உபதேசங்களில் மேலும் தெளிவு பெறுகிறார்கள்.
ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள், தன்னை அண்டிய சீடர்கள் உடல்பக்குவம், மனப்பக்குவம், ஆத்மபக்குவம் போன்ற பக்குவங்களைப் பெற்று, இவ்வுலக வாழ்வில் வாழ்வாங்கு வாழவும், ஆத்மீகத்திலும் சிறப்பாக வளரும் பொருட்டும், ஸ்ரீகோன்குருநாதர் மெஞ்ஞான சபையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆத்மயோக உபதேசங்களைப் போதித்து அருளிக் கொண்டிருக்கிறார்.
