ஆத்மயோகம்
மூடநம்பிக்கைகள் மலிந்த இக்கலிகாலத்தில், மெய்யான பக்தியில் வளரும் பொருட்டு, நமக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரமாத்மாவின் பாகமான ஜீவாத்மாவைத் தூண்டி, வளர்த்து, பரிசுத்தமடையச் செய்து, இறைவனுக்கு ஓர் கருவியாக மாறும் பேற்றினை அடைய வழிகாட்டுவதே இவ்வறக்கட்டளையின் முக்கிய சேவையாகும்.
ஸித்தர்கள் உணர்ந்து, உலகோர்க்கு உணர்த்திய ஸித்திமார்க்கத்தை உலகிலிருந்து மறைந்துப் போகாமல் பாதுகாக்க, இவ்வறக்கட்டளை பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஸித்தர்களால் கண்டறியப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, ஸித்தர்கள் முக்தி அடைந்த மார்க்கமே ஸித்திமார்க்கமாகும். ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள், அழிந்து போகும் நிலையிலிருந்த ஸித்திமார்க்கத்திற்குப் புத்துயிரூட்டி, இக்கலிகாலத்தில் வாழும் மக்களின் மனநிலைக்கேற்ப, அறிவு நிலைக்கேற்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றியமைத்து, “ஆத்மயோகம்” என்னும் எளிய யோகப்பயிற்சி முறையை உருவாக்கி போதித்து அருளிக் கொண்டிருக்கிறார்.
மெஞ்ஞான சபை என்பது ஸித்திமார்க்கத்தில், ஸித்திமார்க்கத்தைப் போதிக்கும் மெய்குருமார்களால் உருவாக்கப்படுவதாகும்.
