அறக்கட்டளையின் முக்கிய சேவைகள்

கல்விச் சேவை:

ஸ்ரீகோன்குருநாதர் மெஞ்ஞான சபை அறக்கட்டளையின் ஓர் அங்கமான, ஸ்ரீகோன்குருநாதர் வித்யாலயம் என்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, இவ்வறக்கட்டளையால் 2010-ஆம் ஆண்டு  நிர்மாணிக்கப்பட்டு, தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று, சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும், அவரது அருளாலும், இந்த அறக்கட்டளையைச்  சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள், நல்லொழுக்கத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழும் பொருட்டு  ஏழை எளிய மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனும், மிகக்குறைந்த செலவில் மாணவர்கள் தரமான கல்வி பயிலவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் இப்பள்ளி சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டு வருகிறது.

மருத்துவ சேவை:

இந்த மெஞ்ஞான சபை அறக்கட்டளையில் சித்த மருத்துவமுகாம், ஆயுர்வேத மருத்துவமுகாம், கண் மருத்துவமுகாம், பல் மருத்துவமுகாம், இரத்ததான முகாம் மற்றும் மனநல மருத்துவமுகாம் போன்ற பல மருத்துவமுகாம்களையும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான சேவைகளை இலவசமாக செய்துகொண்டு வருகிறது.

A.C.S மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையும், ஸ்ரீகோன்குருநாதர் மெஞ்ஞான சபை அறக்கட்டளையும் இணைந்து, ஆசிரம வளாகத்தில் ஓர் ‘இலவச மருத்துவ சேவை மையத்தை’ 08/01/2020 முதல் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறது.

இந்த மருத்துவ சேவை மையத்தில், இந்த அறக்கட்டளையைச்  சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழும் மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுப் பயனடைந்து வருகிறார்கள்.

“மற்ற உயிர்களுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டு” என்னும் தத்துவத்தின்படி, இத்திருச்சபையின் ஜீவசகோதரர்கள் அனைத்து சேவைகளையும் தன்னார்வத் தொண்டாக செய்து கொண்டு வருகிறார்கள்.

இந்த அறக்கட்டளைக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு, இந்திய வருமான வரிச்சட்டம் 80-G பிரிவின்கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (வரிச்சட்டம் 1961 vide DIT ( E ) NO: 2039 (104) 94-95)