ஸித்திமார்க்கம் பற்றிய விளக்கம்
ஸித்தர்கள், சாதாரண மனித நிலையிலிருந்து, ஆத்மீகத்தில் பல நிலைகளில் வளர்ந்து, தனக்குள்ளிருக்கும் இறைவனின் பாகமான ஜீவாத்மாவை உணர்ந்து, ஜீவாத்மாவின் சக்திகளை ஸித்திகளாக வெளிப்படுத்தி, இந்த ஜீவாத்மா வழியாக அந்த பரமாத்மாவை உணர்ந்து, ஸித்தர்களாக உயர்ந்த மார்க்கமே ஸித்திமார்க்கமாகும்.
ஸித்திமார்க்கம் செயல்பாடுடைய மார்க்கமாகும். எதுவொன்றும் நம் அனுபவத்திற்கு வந்தால்தான் அது உண்மை என்ற அடிப்படையில், பக்தியை உடலாலும், உள்ளத்தாலும், உயிராலும் அனுபவபூர்வமாக உணர்ந்து, உடல்பக்குவம், மனப்பக்குவம், ஆத்மபக்குவம் போன்ற பக்குவங்களைப் பெற்று, ஆத்மாவில் உள்ள பாவங்களைப் போக்க சூழ்நிலைகள் அமைத்து, பரிசுத்தப்படுத்தி, ஆத்மாவை வளர்த்து, முக்தி அடையும் மார்க்கமே ஸித்திமார்க்கமாகும்.
