அடிப்படைத் தத்துவம்
அடிப்படைத் தத்துவங்கள் என்பது, இறைவன் பல கோடி கிரகங்களையும், அதில் உயிர்கள் வாழும் கிரகங்களையும், பல கோடி நட்சத்திரங்களையும், பிரபஞ்சங்களையும், அண்டங்களையும், எந்த விதிகளின் கீழ் படைத்து, காத்து, அழித்துக் கொண்டிருக்கிறாரோ அவ்விதிகளே அடிப்படைத் தத்துவங்கள் ஆகும்.
ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள், ஜாதி, மத, இன பேதங்களில்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் விட்டுக்கொடுத்து கூடிவாழும் வழிமுறைகளை இந்த மெஞ்ஞான சபையில் போதித்து அருள்கிறார்.
இறைவன் அருளிய இந்த அரிய மானிடப் பிறப்பை மனத்திருப்தியுடனும், ஆத்மதிருப்தியுடனும் வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளையும் இந்த மெஞ்ஞான சபையில் போதித்து அருள்கிறார்.
எந்த மதத்தைச் சார்ந்தவராயினும், எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக இருப்பது ‘ஆத்மா’. ஆத்மாவைப் பற்றிய ஞானம் ‘ஆத்மஞானம்’ அல்லது ‘ஆத்மீகம்’ அல்லது ‘மெஞ்ஞானம்’ என்றறியப்படுகிறது. ஆகையால், மெஞ்ஞானத்தைப் போதிக்கும் இவ்வறக்கட்டளை, “எந்த ஒரு மதத்தையோ அல்லது பிரிவையோ சார்ந்ததல்ல”. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைக் கொண்டு எம்மதத்தவரும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் செயலாற்றி வருகிறது.
