குருநாள்
இந்த மெஞ்ஞான சபையை உருவாக்கிய அவதார புருஷர் ஸர்வஸ்ரீ கோன்குருநாதர் அவர்கள் “தீர்க்கபிரம்மோபதேசம்” பெற்று தன் அவதாரத்தின் நோக்கத்தை உணர்ந்த நாளை ஒவ்வொரு வருடமும் குருநாளாக சீடர்கள் கொண்டாடுகிறார்கள்.
குருநாள்:
- சீடர்கள் குருவை அடைந்த நாளாகவும் குருநாள் கொண்டாடப்படுகிறது.
- ஆத்மீகத்தில் மறுபிறவி தந்த குருநாதருக்கு நன்றி செலுத்தும் நாளாகவும்,
- குருபக்தியை உறுதி செய்யும் நாளாகவும்,
- ஆத்மீகத்தில் சீடர்கள் பாதி, குரு பாதி என்பது தத்துவமாகும். ஆகவே சீடர்கள் அன்றாடம் இயற்றும் யோகத்தில் குறைகள் இருப்பதால் அவை முழுமை அடைவதில்லை. அந்தக் குறைகளைப் போக்கும் பொருட்டு குருநாதர் சீடர்களுக்காக, தான் இயற்றிய தவப்பயனை சீடர்களின் தகுதிக்கேற்ப பகிர்ந்தளிக்கும் நாளாகவும்.
- குருவின் அருளால் பல ஜென்ம பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கான சூழ்நிலை அமையும் நாளாகவும்,
- சீடர்கள் நித்தியத்தை நோக்கி ஒவ்வொரு படிகளாக முன்னேறும் நாளாகவும், குருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்தப் புனித நாளை சீடர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மெஞ்ஞான சபைக்கு வந்து கோன்குருநாதரை வணங்கி, அவரது அருளாசியைப் பெறுகிறார்கள்.
இத்திருச்சபையில் கொண்டாடப்படும் ஒரே திருவிழாவான ‘குருநாள்’ வருடம்தோறும் தீபாவளி அன்று மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆத்மீகத்தையும் தர்மத்தையும் பிரிக்க இயலாது என்ற தத்துவத்தின்படி, ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை உணர்ந்து, இந்த அறக்கட்டளையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஆத்மீக சேவைகளையும், சமூகநல சேவைகளையும் இந்த அறக்கட்டளை செய்துகொண்டு வருகிறது.
