சாதாரணமாக நுரையீரலில் பல லட்சம் நுணுக்கமான பைகள் உள்ளே இருக்கும். இந்த சின்னச்சின்ன பைகள் மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்த்தால் தான் தெரியும். இந்த பையை சுற்றி மெல்லிய நரம்புகள் நாம் ஈர்க்கும் காற்றில் உள்ள பிராணவாயுவை மட்டும் ஈர்த்து கொள்ளும். அந்தநரம்புகளை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வழியாக பிராண சக்தியை ஈர்த்து உடல் முழவதும்பரப்பும். இந்த பைகள் எல்லோருக்கும் முழுமையாக வேலை செய்வதில்லை.
நாம் சாதாரணமாக மூச்சை இழுத்து விடும்போது எல்லா பைகளும் நிரம்புவதில்லை. கடினமான வேலை செய்பவர்கள் கூட மூச்சை இழுத்து உடனே வெளியே விட்டு விடுவார்கள். யோகிகள் அப்படி வேலை செய்வதில்லை. அவர்களுக்கு நிறைய பிராண வாயு தேவை. நாம் ஈர்க்கும் காற்று எல்லா பைகளிலும்நிரம்ப வேண்டும். அதனால் தான் கும்பகத்தில் மூச்சை இழுக்கும் நேரத்தில் 4பங்கு உள்ளே நிறுத்த வேண்டும். நிறுத்தும் போது எல்லா பைகளிலும் காற்று நிரம்பும். பலூன் ஊதினால் எப்படி பெரிதாக மாறுமோ அதைப்போல் எல்லா பைகளிலும் காற்று நிரம்பும். அதனால் தான் காற்றை உள்ளே இழுக்கும் போது வயிறு வெளியே வருகிறது.அதைப்போல் காற்றை வெளியே விடும்போது வயிற்றை உள்ளே அழுத்துகிறோம். காற்றை உள்ளே இழுக்கும் போது நுரையீரல் பெரிதாகி காற்று உள்ளே தங்க நிறைய இடத்தை தருகிறோம். காற்றை வெளியே விடும் போதும் வயிற்றை சுருக்குகிறோம். உள்ளே ஈர்க்கும்காற்றை உள்ளே நிறுத்துவதால் அதிலுள்ள (ஆக்சிஜனை) பிராணவாயுவை ஏற்றுக்கொள்ளும், பிராணசக்தி அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
நாம் காற்றை உள்ளே இழுக்கும்போது எல்லா பிராணசக்தியையும் இழுப்பதில்லை, சாதாரணமாக மூச்சு விடும்போது எல்லா பிராணவாயுவையும் விட்டு விட்டு, கரியமில வாயுவை எல்லாவற்றையும் வெளியேற்றுவதில்லை. எல்லாம் ஒரு சதவிகிதம்தான்.
நம்மைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் 20% பிராணவாயுவும் 78% நைட்ரஜனும், 1% to 2% கரியமிலவாயுவும், மற்ற வாயுக்களும் உள்ளன.
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது உள்ளே ஈர்க்கும் காற்றில் உள்ள 20% பிராணவாயுவில்,15% பிராணவாயு, வெளிவிடும் மூச்சு காற்றோடு வெளியேறிவிடும். மீதமுள்ள5% பிராணவாயுதான் உள்ளே பயன்படுகிறது. பிராணாயாமம் பழகிக் கொண்டே வந்தால் உள்ளே பயன்படும் பிராணவாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும்.
ஆனால் தவசிகள் அவ்வாறு செய்வதில்லை மூச்சை மெதுவாக இழுத்து, மெதுவாக மூச்சை விட்டுவிடுவார்கள் உள்ளே அடக்குவதில்லை.
கடும் தவம் இயற்றுபவர்கள் ஒரு வருடத்தில் 4மாதம் மூச்சை இழுத்து,8 மாதம் வெளியே விடுகின்றனர் . அவர்கள் நுரையீரலுக்கு வேலையே கொடுப்பதில்லை. அவர்களுக்கு பிராணவாயு நுரையீரல் வழியாக ரத்தத்திற்கு செல்வதில்லை , நேராக தோல் வழியாக ஈர்க்கப்படுகிறது. அவர்களுக்கு இப்போது நுரையீரல் செயல் தேவை இல்லை.
ஆனால் தவத்தை விட்டு வெளியே வந்தால் நுரையீரல் செயல் தேவை. இப்போது அசையாமல் இருப்பதால் உடலுக்கான எந்த சக்தியும் தேவை இல்லை. சக்தி இழப்பு ஏற்படக்கூடாது என்பதால்தான் அவர்கள் நுரையீரல் வழியாக மூச்சை இழுத்து விடுவதில்லை. மூச்சை விடக்கூட ஒரு சக்தி தேவை. அதனால் அவர்கள் பிராணயாமம் பழகிக்கொண்டே வரும்போது அதன் மூலமாக தோலில் மாற்றங்கள் ஏற்பட்டு காற்றிலுள்ள பிராணவாயு, உணவு, நீர் இவற்றை ஈர்க்கும் சக்தி ஏற்படுகிறது. நுரையீரலின் வேலையை குறைத்துக்கொண்டே வரும்போது தோல் வழியாக மற்ற வேலைகள் நடக்கிறது.
பின்புசிறிது சிறிதாக, காற்றிலுள்ள நீர், உணவு இவற்றை எடுத்துக்கொள்ளும் நிலை தோலுக்கு உருவாகிறது. அதே நேரத்தில் தவத்திலிருந்து வெளிப்படும் போது நுரையீரல் திரும்பவும்வேலை செய்ய வேண்டும். ஆனால் உடனே வேலை செய்வதில்லை,சிறிது சிறிதாகதான் வேலைசெய்ய வைப்பார்கள். தவத்திலிருந்தும் சிறிது சிறிதாக தான் வெளிவருவார்கள்.பழையபடி உணவை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்வார்கள்.
மூச்சை உள்ளே அடக்குவதால் நிறைய பிராணவாயுஉடலில் சேர்கிறது. அதனால் சாப்பிடும் போது ஒரு சிலர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார்கள், ஒரு சிலர் ஒரு லட்டை அப்படியே சாப்பிடுவார்கள். அதிலுள்ள ருசியும் தெரியாது,அதனால்தொந்தியும், தொப்பையும் ஏற்படும். உமிழ் நீரோடு அரைத்து தான் எல்லா உணவையும் சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரண நீர் சுரந்து ஜீரணிக்க முடியும். அப்படியில்லை என்றால் ஜீரணம் ஆனாலும் எந்த வித பயனுமில்லாமல் கொழுப்பாக நின்றுவிடுகிறது. நுரையீரல் தான், முக்கியமாக பிராணவாயுவை உடலில் பரப்பகூடிய ஒரே உறுப்பு. பிராணவாயு நுரையீரலை சக்தி உடையதாக மாற்றக்கூடியது. ஆகையால் தான் காற்றை உள்ளே நிறுத்துகிறோம்.
